பேசுதல் குறைபாடு
பேசுதல் குறைபாடு என்பது நோயல்ல.அது ஒரு குறைபாடு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.அதனை ஆரம்ப நிலையிலேயே நாம் சரி செய்து விடலாம். இதற்கு முறையான பயிற்சியும் முயற்சியும் மட்டுமே தேவை.
பேசுதல் குறைபாடு உடைய மாணவனை முதலில் அவன் மனதில் நினைப்பதை பேச வைக்க வேண்டும்.இதனால் வெளிப்படையாக பேசுவதால் ஏற்படும் தயக்கம் குறையும்.
பேசுதல் குறைபாடு உடைய மாணவனை தினமும் அவனுக்கு தெரிந்த சக மாணவரின் உதவியோடு புத்தகத்தின் ஏதேனும் ஒரு பக்கத்தை வாசிக்க திரும்பத் திரும்பக் கூற வைக்க வேண்டும். இந்தப் பயிற்சியை தினமும் செய்ய வைக்க வேண்டும்.
அதிகமான வார்த்தைகளை பயன்படுத்தும் போதும் முறையாக தமிழ் வார்த்தைகளை அறியும்போதும் பேசுதல் குறைபாடு சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்கும்.
பேச்சு குறைபாடு உடைய குழந்தையிடம் கதை கூறி அந்த குழந்தையை திரும்ப கதையை கூற வைக்க வேண்டும். இதுவும் ஒரு வித பயிற்சியே.
பேசுதல் குறைபாடுகளுக்காக வழங்கப்படும் செயல்பாடுகளில் குழந்தைகளின் பங்கேற்பு அதிகமாக இருக்க வேண்டும்.
ரா.ஷீலா,
ஆசிரியை.
Post a Comment