திக்கிப் பேசுதல்...
குழந்தைகள் திக்கிப் பேசுவது மழலையில் தான் ஆரம்பிக்கிறது.பேசுவதற்குப் பயிற்சி அளித்துக் கொண்டே இருக்க வேண்டும். திக்கி பேசுதல், பேசுதல் குறைபாடு போன்றவை குணப்படுத்த முடியாத பிரச்சினை கிடையாது. முறையான பயிற்சியை சரியான நேரத்தில் மேற்கொண்டால் பேச்சுக் குறைபாட்டை சரி செய்யலாம்.வீட்டில் அடிக்கடி குழந்தைகளுடன் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். பெற்றோர்களின் பயிற்சியும் அவசியம். பேசுதல் குறைபாடுகளுக்கான வழங்கப்படும் செயல்பாடுகளில் குழந்தைகளின் பங்கேற்பு அதிகமாக இருக்க வேண்டும்.. "நீ பேச மாட்ட" என குழந்தையின் தன்னம்பிக்கையை உடைக்க கூடாது. பக்கத்தில் இருப்பவர்கள் கிண்டல் செய்கிறார்கள் என்பதற்காக அமைதியாக இருக்க நினைப்பார்கள். பேச்சுத் திறன் குறைபாட்டினால் மன அழுத்தத்திற்கு ஆகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டும். சத்தமாக வாசிக்கச் செய்ய வேண்டும்.வேகமாகவும் தொடர்ச்சியாகவும் பேச நிர்பந்திக்காமல், இயல்பாக குழந்தை பேசி முடிக்கும் வரை கேட்க வேண்டும். யாரிடமும் குழந்தையின் குறையை சுட்டிக்காட்டக் கூடாது...
Post a Comment