1) தேசிய அரசியல் கட்சிகள்
2) மாநில அரசியல் கட்சிகள்
3) அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள்.
1) தேசிய அரசியல் கட்சிகள்:-
தேசிய அரசியல் (the national level) கட்சியாக அங்கீகரிக்கப்பட, மொத்த மக்களவை இடங்களில் 2 சதவீத இடங்களில் (அதாவது 11 இடங்கள்) குறைந்தபட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களில் வெற்றி பெற வேண்டும்.
அல்லது மக்களவை அல்லது சட்டப்பேரவை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் 6 விழுக்காடு வாக்குகள் பெறுவதோடு, 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
இந்த இரு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யாவிட்டால், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிப்பட்ட மாநில கட்சியாக இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் தேசிய கட்சி என்ற அங்கீகாரம் வழங்கப்படும். இந்திய தேர்தல் ஆணையத்தால் (Election Commission of India) அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சிகள் ஏழு ஆகும். இதில் கை சின்னத்தைக் கொண்ட இந்திய தேசிய காங்கிரஸும், தாமரைச் சின்னம் கொண்ட பிஜேபியும் முக்கிய தேசிய அரசியல் கட்சிகளாகும்.
2) மாநில அரசியல் கட்சிகள்:-
மாநில அரசியல் (state level political parties) கட்சியாக தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற
சட்டப் பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றிப்பெற வேண்டும்.
மக்களவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை தொகுதியில் வெற்றிப்பெற வேண்டும்.
சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
மக்களவை தேர்தலில் ஒவ்வொரு 25 தொகுதிக்கும் ஒரு தொகுதியில் வெற்றிப்பெற வேண்டும்.
மாநிலத்தில் பதிவாகும் ஓட்டுக்களில் குறைந்தபட்சம் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும்.
இதில் ஏதேனும் ஒரு நிபந்தனையை பூர்த்தி செய்தால் மாநில அரசியல் கட்சியாக அங்கீகாரம் வழங்கப்படும்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தமிழகத்தில் மாநில அரசியல் கட்சிகள் என்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் (A recognised political party) உதயசூரியன் சின்னம் கொண்ட திமுக, இரட்டை இலை சின்னம் கொண்ட அதிமுக, மாம்பழம் சின்னம் கொண்ட பாமக ஆகிய மூன்று மாநில அரசியல் கட்சிகளாகும்.
அதாவது தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்ட சின்னத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டஅரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளாகும்.
3) அங்கீகரிக்கப்படாத பதிவு செய்த அரசியல் கட்சிகள்:-
இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தலின் பொழுது ஒதுக்கப்படும் சின்னத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளாத அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாகும். தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் விவரம் கீழ் வருமாறு:-
மதிமுக, தேமுதிக, விடுதலை சிறுத்தை கட்சி, நாம் தமிழர் கட்சி, அமமுக, மக்கள் நீதி மய்யம், மனித நேயம் மக்கள் கட்சி,
புதிய தமிழகம் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை போன்ற இன்னும் பல கட்சிகளாகும்.
உதாரணமாக:- மதிமுகவிற்கு முதலில் குடை சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. தேர்தல் ஆணையத்தால் விதிக்கப்பட்ட வாக்கு சதவீதம் மற்றும் சட்டசபை உறுப்பினரின் வெற்றியின் எண்ணிக்கை இல்லாததால் குடை சின்னத்தை இழந்தது. பிறகு பம்பரம் சின்னத்தில் நின்றது. அதையும் இழந்தது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகவே உள்ளது.
அங்கீகாரம் என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் என்பதல்ல. மக்களின் அங்கீகாரம் என்பதாகும். மேற்கண்ட கட்சிகள் மக்களின் அங்கீகாரம் பெறாத பதிவு பெற்ற கட்சிகளாகும். இதே நிலையில்தான் மேற்கண்ட அரசியல் கட்சிகளும் உள்ளன.
டார்ச் லைட்டினை மக்கள் நீதி மைய்யமும், பிரஷர் குக்கரை அமமுக கட்சியும் இதர கட்சிகள் மேற்படி சின்னங்களை கேட்காத நிலையில் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுப் பெற்று தேர்தலில் களம் கண்டன.
புதியதாக தேர்தல் ஆணையத்திடம் பதிவு பெற்ற கட்சி, தேர்தல் ஆணையம் வழங்கும் சின்னத்தில் தேர்தலில் நிற்க வேண்டும். வழங்கிய சின்னம் நிலைத்திருக்கவும், மாநில அரசியல் கட்சி அங்கீகாரம் பெற மேற்கண்ட எண்ணிக்கையில் சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதுடன் குறிப்பிட்ட சதவீத வாக்குகளையும் பெற வேண்டும்.
புதியதாக பதிவு பெற்ற கட்சி ஐந்து ஆண்டுகளில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களில் களம் காண வேண்டும். இவ்வாறு ஐந்து ஆண்டுகளாக தேர்தலில் களம் காணாத பதிவு பெற்ற கட்சிக்கு உரிய அறிவிக்கை (நோட்டீஸ்) மூலம் விளக்கங்கள் கோரப்படும். சம்பந்தப்பட்ட கட்சி உரிய விளக்கங்கள் அளிக்கவில்லையெனில் செயல்படாத கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும்.
தற்பொழுது டி.ராஜேந்திரர் உருவாக்கிய இலட்சிய திராவிட முன்னேற்ற கழகம் கடந்த ஐந்தாண்டுகளாக தேர்தலில் நிற்காததால் செயல்படாத கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தால் செயல்படாத கட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகும் சம்பந்தப்பட்ட கட்சி உரிய விளக்கங்கள் அளிக்க வேண்டும். அதன் பிறகும் உரிய விளக்கங்கள் அளிக்கவில்லையெனில் ஆறாண்டுகள் முடிவில் மேற்படி கட்சியின் பதிவு இந்திய தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்படும்.
தற்பொழுது சமீபத்தில் தமிழகத்தில் அவ்வாறாக ரத்து செய்யப்பட்ட கட்சிகளின் எண்ணிக்கை ஏழு ஆகும். அதன் விவரம் கீழ் வருமாறு:-
1) கொங்குநாடு ஜனநாயக கட்சி
2) மக்கள் மறுமலர்ச்சி முன்னேற்ற கழகம்
3) எம்ஜிஆர் தொண்டர்கள் கட்சி
4) Patriot "தேசபக்தி"
5) புதிய நீதி கட்சி
6) தமிழ் மாநில காயிதே மில்லத் கழகம்
7) தமிழர் கழகம்
இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ள டி.ராஜேந்திரரின் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் 21 கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Post a Comment