வீடியோ கேம் விளையாடுவதால் வரும் ஆபத்து!
வீடியோ கேம்களை விளையாடுவது, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒழுங்கற்ற இதயத்துடிப்புக்கு வழிவகுக்கலாம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
ஹார்ட் ரிதம் இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கட்டுரை, வீடியோ கேம்களை விளையாடும்போது சுயநினைவை இழக்கும் குழந்தைகளிடையே ஒரு அசாதாரணமான சூழலை ஏற்படுத்துகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது.
வீடியோ கேம்கள் சில குழந்தைகளுக்கு தீவிர ஆபத்தை பிரதிநிதித்துவப்படுத்தலாம். எலக்ட்ரானிக் கேமிங்கின் போது திடீரென சுயநினைவை இழக்கும் குழந்தைகள் இதய நிபுணரால் மதிப்பிடப்பட வேண்டும்.
ஏனெனில் இது ஒரு தீவிர இதய பிரச்சனையின் முதல் அறிகுறியாக இருக்கலாம் என்று அந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளரும், ஆஸ்திரேலியாவின் குழந்தைகளுக்கான இதய மையத்தை சேர்ந்தவருமான கிளாரி எம். லாலே தெரிவிக்கிறார்.
Post a Comment