பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.03.2023


    திருக்குறள் :


பால்: அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்:  ஒழுக்கம் உடைமை


குறள் :137


ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி.


பொருள்:

ஒழுக்கத்தினால் எவரும் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.


பழமொழி :

Aspiring people are inspiring people.

ஆர்வம் உடையோரே ஆர்வத்தைத் தூண்ட முடியும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. மழை காலத்திற்கு என்று உணவை சேமிக்கும் எறும்பை போல மாணவ பருவத்திலேயே சேமிக்க பழகுவேன். 

2. கனி தரும் மரங்கள் போல மற்றவர்க்கு எப்போதும் பயன் தர முயற்சிப்பேன்.

பொன்மொழி :

உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே.. ஆனால் சந்தர்ப்பம் சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன.

பொது அறிவு :

1. கல்பாக்கம் அணு உலையின் பெயர் என்ன?

 பூர்ணிமா . 

 2.வெள்ளைப் பூண்டில் உள்ள அமிலம் எது? 

 பாலிக்

English words & meanings :

commendation - formal or official praise. noun. The girl who rescued the sinking students received commendation. புகழ்ச்சி, மெச்சுதல். பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

பிற்பகல் தூக்கம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை ஒழுங்குபடுத்துகிறது. அதேவேளையில் பிற்பகல் தூக்கம் 2 மணி நேரத்துக்குள் இருக்க வேண்டும். அதனை தாண்டி செல்லக்கூடாது. தூக்கம் மட்டுமின்றி, சரியான வாழ்க்கை முறையும் ஆரோக்கியமான உணவும் மூளையின் சிறந்த செயல்பாட்டுக்கு மிகவும் முக்கியம் ஆகும். அதற்கு நீங்கள் சில உணவுப் பொருட்களை தினமும் சாப்பாட்டில் செய்துக் கொள்வது அவசியமாகும்.


மார்ச் 02



சரோஜினி நாயுடு அவர்களின் நினைவு நாள் 





சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் - மார்ச் 2,1949, லக்னோ) அவர் இந்தியாவின் நைட்டிங்கேல் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.


1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு அவர் யுனைட்டட் ப்ரொவின்சஸ் (தற்போது உத்தரப்பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது) ன் ஆளுநராக பதவியேற்றார். இதன் வழியாக இந்தியாவின் முதல் பெண் ஆளுநரானார். மார்ச் 2, 1949 அன்று மாரடைப்பால் அவர் மரணமடைந்தார்.


நீதிக்கதை

ராஜகுருவின் நட்பு


விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் தாத்தாச்சாரியார் என்பவர் ராஜகுருவாக இருந்தார். தெனாலி கிராமத்துக்கு அருகில் உள்ள மங்களகிரி என்னும் ஊருக்கு ராஜகுரு தாத்தாச்சாரியார் வந்திருந்தார். 


இதையறிந்த தெனாலிராமன் ராஜகுருவை சந்தித்தான். தன்னுடைய விகடத் திறமையாலும் பேச்சாற்றலாலும் ராஜகுருவின் சிஷ்யன் ஆனார். ராஜகுருவின் நட்பு கிடைத்த பின் தன் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும் அதனால் மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் சிபாரிசு செய்து அரண்மனையில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டிக் கொண்டார். 


அவன் வேண்டுகொண்டபடியே ராஜகுருவும் அரண்மனையில் வேலைக்கு சேர்த்து விடுவதாக வாக்களித்தார். பிறகு ராஜகுருவிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. அதனால் விஜயநகரம் சென்று ராஜகுருவை நேரில் பார்த்து அரண்மனையில் சேர்ந்து விட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார். 


அதன் பிறகு தெனாலி பல நாட்கள் நடந்து விஜய நகரம் வந்து சேர்ந்தார். தெனாலிராமன் ராஜகுருவை அவரது இல்லத்தில் சந்தித்தார். தெனாலிராமனைப் பார்த்ததும் ராஜகுரு அதிர்ச்சி அடைந்தார். யாரப்பா நீ? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். 


ராஜகுருவே நான்தான் தெனாலிராமன். தாங்கள் மங்களகிரிக்கு வந்த போது நண்பர்கள் ஆனோம். தாங்கள் அரசவையில் என்னைச் சேர்த்து விடுவதாகச் சொன்னீர்கள். பல மாதங்களாக தங்களிடமிருந்து எந்த பதிலும் வராததால் தான், நான் நேரில் வந்துள்ளேன். தயவு செய்து என்னை பற்றி மன்னரிடம் எடுத்துச் சொல்லி அரசவையில் சேர்த்து விடுங்கள் என்று வேண்டினான். 


உன்னை யாரென்றே எனக்குத் தெரியாதப்பா... மரியாதையாக வெளியே போ, இல்லையேல் அவமானப்படுவாய் என்று விரட்டினார். வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட தெனாலிராமன் பழிக்குப்பழி வாங்கத் துடித்தார். இதற்காக காளிதேவியைத் துதித்தார். 


நீதி :

நாம் யாரையும் எதற்காகவும் நம்பக் கூடாது.


இன்றைய செய்திகள்

02.03.2023


* சென்னை எல்ஐசி கட்டிட பகுதியில் வருகிறது அடுக்குமாடி கட்டிடங்கள்: சிஎம்டிஏ புதிய திட்டம்.


* ஆசிரியர்களின் நலன் காக்க ரூ.225 கோடியில் புதிய திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.


* பிப்ரவரியில் இந்தியாவின் மின் நுகர்வு 9% அதிகரிப்பு - 11.78 ஆயிரம் கோடி மின்சார யூனிட் பயன்பாடு.


* எல்லையோர கிராமங்களின் வளர்ச்சியை கண்காணிக்க மத்திய அமைச்சர்களுக்கு உத்தரவு.


* கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் பரவியது என்று அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ தெரிவித்துள்ளது.


* ஈரானின் அணுசக்தி தளத்தில் 83.7% யுரேனியம் செறிவூட்டப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.


* ஐசிசி டெஸ்ட் தரவரிசை : இந்திய வீரர் அஸ்வின் முதல் இடத்திற்கு முன்னேற்றம்.


* பெண்களுக்கான உலகக் கோப்பை ஸ்னூக்கர் போட்டி - இந்திய அணி தங்கம் வென்றது.


* 'பிபா'வின் சிறந்த வீராங்கனை விருதை பெற்றார் அலெக்சியா புடெல்லாஸ்.


Today's Headlines


* Apartment buildings coming up in Chennai LIC building area: CMDA new project.


 * New schemes worth Rs 225 crore to protect teacher' welfare: CM Stalin's announcement


 * India's electricity consumption up 9% in February - 11.78 thousand crore electricity units were used.


 * Union Ministers directed to monitor development of border villages.


 * According to the FBI, the United States intelligence agency, the Corona virus was spread from a Chinese laboratory.


 * Iran's nuclear power plant has 83.7% enriched uranium, according to a United Nations Monitoring committee.


* ICC Test Rankings: Indian batsman Ashwin moves up to No.1


 * Women's World Cup Snooker Tournament -  India team bags the gold.


 * Alexia Butellas won the FIFA Player of the Year Award.

 

 Prepared by


Covai women ICT_போதிமரம்

Post a Comment

Previous Post Next Post

Please Send Your Materials , Guides and Question Papers to thekalvitn.com@gmail.com

 The kalvi telegram group link

Thekalvi.com WhatsApp group link 

NOTE: The Entire Copyright And Credits of the PDF Material, Guide, or Question Paper are Owned by the Respected Owner and author of the Material. We had Uploaded This Only For Educational Purposes.