இன்னும் 15 நாட்களே உள்ளன..
11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்க..
மார்ச் 13 முதல் தேர்வுகள் தொடக்கம்
இந்தநிலையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
2023 ஆம் ஆண்டுக்கான 11,12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி மற்றும் மார்ச் முதல் வாரம் வரை நடைபெறுகிறது.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை – 2023
மார்ச் 13 – மொழிப்பாடம்
மார்ச் 15 – ஆங்கிலம்
மார்ச் 17 – கணினி அறிவியல்
மார்ச் 21 – இயற்பியல், பொருளாதாரம்
மார்ச் 27 – கணிதம், விலங்கியல், வணிகவியல்
மார்ச் 31 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்
ஏப்ரல் 3 – வேதியியல், கணக்கியல், புவியியல்
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை – 2023
மார்ச் 14 – மொழிப்பாடம்
மார்ச் 16 – ஆங்கிலம்
மார்ச் 20 – இயற்பியல், பொருளாதாரம்
மார்ச் 24 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்
மார்ச் 28 – வேதியியல், கணக்கியல், புவியியல்
மார்ச் 30 – கணினி அறிவியல்
ஏப்ரல் 5 – கணிதம், விலங்கியல்
ஏறக்குறைய மொத்தம் 26 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு தயராக உள்ளனர். தேர்வுக்கு தயாராக குறைவாகவே அவகாசம் உள்ளது. தேர்வுக்கு தயாராகும் முன்பு முதலில் பாடத்திட்டத்தை கையில் வைத்துக் கொள்வது நல்லது. இதன்மூலம் எதைப் படிக்க வேண்டும் என்ற வரம்பு நமக்கு தெரியவரும்.
தேர்வுக்கு முன்பாக எத்தனை நாட்கள் அவகாசம் உள்ளது என்பதை கணக்கிட்டு அதை ஒவ்வொரு பாடத்திற்கும் இத்தனை நாட்கள் என ஒதுக்கி அட்டவணை தயாரிப்பது அவசியம்.
அந்த அட்டவணைப்படி ஒவ்வொரு பாடத்தையும் படித்து முடிக்க வேண்டும். கடந்த ஆண்டு கேள்வித்தாள்களை படிக்க சில தினங்களை ஒதுக்கலாம். அந்த அட்டவணையில் பாடங்கள் குறிப்பிடாமல் சில நாட்களை ஒதுக்கி வைப்பது அவசியம். தவிர்க்க முடியாத காரணங்களால் சில நாட்களில் திட்டமிட்டபடி படிக்க முடியாமல் போகும்போது, பாடங்கள் குறிப்பிடாமல் ஒதுக்கிவைத்துள்ள அந்த நாட்களில் விடுபட்ட பாடங்களை படித்துக் கொள்ள முடியும்.
கடைசியில் தேர்வுக்கு முன்பாக சில நாட்களை படித்தவற்றை நினைவுகூர ஒதுக்குவது நல்லது.
Post a Comment