2023 பொது தேர்வில் எந்த வகையிலான விடைத் தாள்கள் வழங்கப்படும் என, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
மாணவர்களுக்கு, மொழி பாடங்களுக்கான முதன்மை விடைத்தாள், 30 பக்கங்களில் வழங்கப்படும்; கூடுதல் விடைத்தாள் கேட்டால், கோடிட்ட விடைத்தாள்கள் மட்டும் வழங்க வேண்டும்.
உயிரியல் பாடத்தில், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்கு தனித்தனியே இரண்டு முதன்மை விடை எழுதும் தாள்கள் வழங்கப்படும்.
கணக்கு பதிவியல் பாடத்துக்கு ஒன்று முதல், 14 பக்கங்கள் கோடு இல்லாமலும், மீதமுள்ள பக்கங்கள் கோடிட்டும் விடை எழுதும் தாள்கள் வழங்கப்படும். கணக்கீடுகள் செய்வதற்கு கட்டங்கள் உடைய கூடுதல் விடைத்தாள் வழங்கப்படும். முதன்மை விடைத்தாள்களில் முழுமையாக விடை எழுதிய பிறகே, கூடுதல் விடைத்தாள் வழங்க வேண்டும்.
வரலாறு தேர்வுக்கு, பண்டைய கால இந்தியாவின் வரைபடமும், புவியியல் தேர்வுக்கு, உலக வரைபடமும் இணைக்கப்படும்.
வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் தேர்வுகளுக்கு, வரைகட்ட தாளான கிராப்ஷீட் இணைத்து வழங்கப்படும்.
தாவரவியல் மற்றும் உயிரியல் பாடங்களுக்கு கோடு இல்லாத விடைத்தாள்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment