10ம் வகுப்புத் தேர்ச்சி போதும் : மத்திய அரசுத் துறைகளில் 11,000 காலியிடங்கள் அறிவிப்பு!



Multi-Tasking (Non-Technical) Staff and Havaldar (CBIC & CBN):  மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் மற்றும் ஹவல்தார் (சிபிஐசி & சிபிஎன்) தேர்வு- 2022 தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection commission) வெளியிட்டுள்ளது. 


இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 11,409 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


காலியிடங்கள்: 


பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் : 10880


ஹவல்தார் (சிபிஐசி & சிபிஎன்): 529


இந்த எண்ணிக்கை தோராயமானது என்றும், நிர்வாகக் காரணங்களினால் மேலும் அதிகரிக்கவோ, குறையவோ கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு : பன்னோக்கு பதவிக்கு விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு  01/01/2023 அன்று 18 முதல் 25 வருடங்களாக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர் 20/01/1998 தேதிக்கு முன்பு அல்லது 01/01/2005 தேதிக்கு பிறகு பிறந்திருக்கக் கூடாது.


ஹவல்தார் பதவிக்கு விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு  01/01/2023 அன்று 18 முதல் 27 வருடங்களாக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர் 02/01/1996 தேதிக்கு முன்பு அல்லது 01/01/2005 தேதிக்கு பிறகு பிறந்திருக்கக் கூடாது.


இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.


கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வாரியத்தில் இருந்து 10ம் வகுப்பு  அல்லது சமமான தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.


விண்ணப்பம்  செய்வது எப்படி?  17-02-2023 அன்றைக்குள்  இணையதளம் மூலம் விண்ணப்பபம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இணைய தள முகவரி https://ssc.nic.in/   ஆகும்.


தேர்ச்சி முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு, உடற் திறன் தேர்வு (Physical Efficiency Test), உடற் தகுதி தேர்வு (Physical Standard Test - ஹவல்தார்  பதவிக்கு மட்டும்) ஆகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி முறை இருக்கும்.


விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 ஆகும். பட்டியல் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள், அணைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் இராணுவத்தினர் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம்.

Post a Comment

Previous Post Next Post

Please Send Your Materials , Guides and Question Papers to thekalvitn.com@gmail.com

 The kalvi telegram group link

Thekalvi.com WhatsApp group link 

NOTE: The Entire Copyright And Credits of the PDF Material, Guide, or Question Paper are Owned by the Respected Owner and author of the Material. We had Uploaded This Only For Educational Purposes.