மாண்டஸ் புயல் எங்கே உள்ளது ?
கரையை கடக்கும் பாதை Satellite Live - Mandous Cyclone @www.windy.com
தமிழ்நாட்டில் 29.10.2022 முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழைப் பெய்து வருகிறது. 1-10-2022 முதல் 05-12-2022 வரை 366.2மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவைக் (376.0 மி.மீ.) காட்டிலும் 3 விழுக்காடு குறைவு ஆகும்
www.windy.com :
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென் கிழக்கே 770 கி.மீ தொலைவில் உள்ளது. மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இன்று மாலை புயல் சின்னமாக வலுவடைந்து வட தமிழ்நாடு - புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி நகரும். தமிழக கடலோர பகுதிகளில் டிசம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை மணிக்கு 50 கி.மீ முதல் 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் இதன் காரணமாக கன மற்றும் மிக கனமழைப்பொழிவு ஏற்படும் பகுதிகள் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புயலுக்கு ஐக்கிய அரபு நாடுகள் பரிந்துரைத்த மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது
இந்த மாண்டஸ் புயல் தற்போது எங்கு உள்ளது நேரடி சாட்டிலைட் காட்சிகள்.. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.. கீழ் உள்ள லின்க்கை கிளிக் செய்யுங்கள்.
https://www.windy.com/?10.704,81.914,5
மாண்டஸ் புயலானது, மேற்கு-வடமேற்கு திசையை கடந்து, வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தென் ஆந்திர பிரதேச கடற்கரைகளுக்கு இடையே புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா மாகாணத்திற்கு இடையே கரையை கடக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Post a Comment