நீட் தேர்வு தேதி அறிவிப்பு.. ஜே.இ.இ., க்யூட் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு!
மருத்துவக் கல்லூரிகள், மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு (NEET UG 2023) அடுத்த ஆண்டு மே 7 ஆம் தேதி நடைபெறுகிறது.
பொறியியல் படிப்புக்கான ஜெ.இ.இ. மெயின் (JEE Main) தேர்வுகள் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படுகின்றன.
இதேபோல மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவு தேர்வு (CUET 2023) மே 21 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment