நாளை அரையாண்டு தேர்வு துவக்கம்: எந்த வகுப்புக்கு எப்போது தேர்வு? - முழு விபரம் இதோ!
தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை டிசம்பர் 15 நாள் முதல் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், டிசம்பர் 15 நாள் முதல் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கி, 23 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும்.
6-10 ஆம் வகுப்பிற்கு முதன்மை தேர்வுகள் (தமிழ்-சமூக அறிவியல்) டிசம்பர் 19 முதல் டிசம்பர் 23 வரை 5 நாட்கள் நடைபெறும்.
11-12ஆம் வகுப்பிற்கு முதன்மை தேர்வுகள் டிசம்பர் 15 முதல் டிசம்பர் 23 வரை 7 நாட்கள் நடைபெறும்.
மேலும் மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 6, 8, 10, 12-ம் வகுப்புகளுக்குக் காலையிலும் (9:30am-12pm) 7, 9, 11- ம் வகுப்புகளுக்குப் பிற்பகலிலும் (1:30 - 4pm) தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment