நியூயார்க், ஐக்கிய நாடுகள் சபை தலைமை அலுவலகத்தில், மஹாத்மா காந்தியின் மார்பளவு சிலை வரும் 14ம் தேதி திறக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்து உள்ளது.
இங்கு அமைக்கப்பட்டு உள்ள மஹாத்மா காந்தியின் மார்பளவு சிலையை, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் 14ம் தேதி திறந்து வைக்கின்றனர்.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பு, சுழற்சி முறையில் மாதந்தோறும் ஒரு உறுப்பு நாட்டுக்கு வழங்கப்படும். இந்த வகையில், டிசம்பர் மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா நேற்று முன்தினம் ஏற்றது.
ஐ.நா.,வில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தலைவருக்கான இருக்கையில் அமர்ந்தார்.
இந்நிலையில், இந்தியா இந்த மாதம் பாதுகாப்பு கவுன்சிலில் பயங்கரவாதத்துக்கு எதிரான பல நிகழ்ச்சிகளை நடத்துகிறது.
இதில் பங்கேற்க செல்லும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மஹாத்மா காந்தி சிலையையும் திறந்து வைக்கிறார். இந்த சிலையை, நம் நாட்டின் உலகப் புகழ் பெற்ற சிற்பி பத்மஸ்ரீ ராம் சுதார் வடிவமைத்துள்ளார்.
Post a Comment