ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிக்கான தேர்வு முடிவு குறித்த போலியான பட்டியல் சமூக வலைதளத்தில் பரவுகிறது. தேர்வு முடிவுகள் குறித்த போலியான பட்டியலை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வாணையத்தின் அனானித்து தேர்வு முடிவுகளும் தேர்வணைய இணையதளத்தில் மட்மே வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது. இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்புவோர்களின் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது.இதில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மற்றும் பல்வேறு துறை சார்ந்த தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் குரூப் 4 பதவிகளுக்கான தேர்வை ஜூலை 24 ஆம் தேதி நடத்தியது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 02.07.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்த போலியான பட்டியல் (Fake List) சமூக வலைதளங்களில் பரவி வருவதாக தெரியவருகிறது. இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் தேர்வாணையம் கேட்டுக்கொள்கிறது.
தேர்வாணையத்தின் அனைத்து தேர்வு முடிவுகளும் தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். அதனை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளுமாறும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இது போன்ற பொய்யான தகவல்களை பரப்புபவர்களின் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தேர்வாணையத்தின் தெரிவுகள் அனைத்தும் விண்ணப்பதாரர்களின் தரவரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன. பொய்யான வாக்குறுதிகளைக் கூறி, சட்டத்திற்கு புறம்பாக வேலை வாங்கித்தருவதாகக் கூறும் இடைத்தரகர்களிடம் விண்ணப்பத்தாரர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனர் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
Post a Comment