NIFT - நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி - தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனம்


ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட இத்துறை சார்ந்த பல்வேறு தொழில்நுட்பங்களையும், இவை தொடர்பான தொழில்நுட்ப மேலாண்மையையும் பயிற்றுவிக்கும் சிறந்த கல்வி நிறுவனமாக விளங்குவது நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி. இது சுருக்கமாக நிஃப்ட் (NIFT) என்று அழைக்கப்படுகிறது. மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் 1986 ஆம் ஆண்டு முதல் இயங்கும் கல்வி நிறுவனமாகும்.


ஆடை வடிவமைப்புப் படிப்புகளுக்கான இளநிலை (Under Graduate - UG) மற்றும் முதுநிலை (Post Graduate - PG) பட்டப்படிப்புகளை வழங்குவதோடு அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களையும் வழங்குகிறது நிஃப்ட். இத்துறைசார் கல்வியினைத் தருவதுடன், தொழில்சார் திறன்மிகு வல்லுநர்களையும் உருவாக்குகிறது.


நிஃப்ட் சென்னை, பெங்களூரு, போபால், புவனேஸ்வர், காந்தி நகர்,ஐதராபாத், ஜோத்பூர், காங்ரா, கண்ணூர், கொல்கத்தா, மும்பை, புதுடெல்லி, பாட்னா, ரேபரேலி, ஹில்லாஸ், ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களில் இயங்கி வருவதோடு, துறைசார்ந்த பல்வேறு ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது. இக்கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிக்க, இந்நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும்.


NIFT வழங்கும் பட்டப்படிப்புகள் 


இளநிலைப் படிப்புகள் 


அக்சசரி டிசைன் (Accessory Design), பேஷன் கம்யூனிகேசன் (Fashion Communication), ஃபேஷன் டிசைன் (Fashion Design), நிட்வேர் டிசைன் (Knitwear Design), லெதர் டிசைன் (Leather Design), டெக்ஸ்டைல் டிசைன் (Textile Design) என்ற பாடங்களில் 4 ஆண்டு பேச்சுலர் ஆஃப் டிசைன் (Bachelor of Design - B.Des.) இளநிலைப் படிப்பையும், அப்பேரல் புரொடக்ஷன் (Apparael Production) என்ற பாடத்தில் 4 ஆண்டு பேச்சுலர் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (Bachelor of Fashion Technology - B.F.T ) என்ற இளநிலைப் படிப்பையும் தருகிறது. 


முதுநிலைப் படிப்புகள் 


டிசைன் ஸ்பேஸ் (Design Space) என்ற பாடத்தில் மாஸ்டர் ஆஃப் டிசைன் (Master of Design - M.Des.), மாஸ்டர் ஆஃப் ஃபேஷன் மேனேஜ்மென்ட் (Master of Fashion Management- M.F.M.), மாஸ்டர் ஆஃப் டெக்னாலஜி (Master of Fashion Tech - M.FTech.) ஆகிய 2 ஆண்டு முதுநிலைப் படிப்புகளைத் தருகிறது.


மற்றும் ஆராய்ச்சி படிப்புகள்


கல்வித்தகுதி


பி.டி.எஸ். (B.Des.) படிப்பிற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் +2 தேர்ச்சியும், பி.எஃப்.டெக். (B.F.Tech.) படிப்பிற்கு இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ள பாடப்பிரிவில் +2 தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.


எம்.டி.எஸ். (M.Des.), எம்.எஃப்.எம். (M.F.M.) முதுநிலைப் படிப்புகளுக்கு ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது நிஃப்ட் அல்லது நேஷனல் இன்ஸ்டிடியூட்டின் 3 வருட இளநிலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


எம்.எஃப்.டெக். (M.F.Tech.) படிப்பிற்கு, நிஃப்டின் பி.எஃப்.டெக், பி.இ.,  பி.டெக். ஆகிய ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு 


இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, 1.10.2022 அன்றைய நிலவரப்படி, உச்ச வயது வரம்பு 23 ஆண்டுகள். ஆதிதிராவிட, பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் இவர்களுக்கு 5 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு உண்டு.இட ஒதுக்கீடு: நிஃப்டின் இடங்களில், எஸ்.சி. 15%, எஸ்.டி. 7.5%, ஓ.பி.சி. 27%, மாற்றுத்திறனாளிகளுக்கு 3%, அயல்நாட்டினருக்கு 15%, அந்தந்த மாநிலத்தவருக்கு 20% இடஒதுக்கீடு உண்டு.


ஆடை அலங்காரம் படிக்க நிஃப்ட் நுழைவுத் தேர்வு


மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் நிஃப்ட் கல்வி நிறுவனங்களில் இளங்கலை ஃபேஷன் டெக்னாலஜி மற்றும் இளங்கலை வடிவமைப்பு உள்ளிட்ட ஏராளமான படிப்புகளைப் படிக்கலாம். ஐஐடியில் பொறியியல் படிப்பதற்கு இணையான படிப்புகள் இவை.


இந்தக் கல்வி நிறுவனங்களில் உள்ள 2,370 இடங்களுக்காக, தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு 2023 பிப்ரவரியில் நடைபெறுகிறது.


சேர்க்கை/ விண்ணப்பிக்கும் முறை


நிஃப்டின் www.niftadmissions.in என்ற இணையத்தளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அனைத்து விவரங்களையும் இணையத்தளத்தில் தகவலறிக்கையின் வாயிலாக இலவசமாகப் பெறலாம்.


ஆன்லைனில் விண்ணப்ப தொடக்க நாள்: டிசம்பர் 2022 


தொடர்புக்கு NIFT Head Office, NIFT Campus, HAUZ KHAS, Near Gulmohar Park, New Delhi - 110 016, Ph : +91-11-26542000.  www.nift.ac.in


சென்னை: NIFT Campus, Rajiv Gandhi Salai, Taramani, Chennai - 600 113. Ph: 044 - 22542755 / 22542756.

Post a Comment

Previous Post Next Post

Please Send Your Materials , Guides and Question Papers to thekalvitn.com@gmail.com

 The kalvi telegram group link

Thekalvi.com WhatsApp group link 

NOTE: The Entire Copyright And Credits of the PDF Material, Guide, or Question Paper are Owned by the Respected Owner and author of the Material. We had Uploaded This Only For Educational Purposes.