2023-ம் ஆண்டுக்கான அவ்வையார் விருதுக்கு ஆன்லைனில் விண்ணப் பங்களை பதிவேற்றம் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்தோருக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் அவ்வையார் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் உலக மகளிர் தினவிழாவின்போது தமிழக முதல்வரால் இந்த விருது வழங்கப்படுகிறது.
ரூ.1 லட்சம் பரிசுத்தொகை, 8 கிராம் தங்கப் பதக்கம், பாராட்டுச்சான்று ஆகியவற்றை உள்ளடக்கியது இவ்விருது. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான அவ்வையார் விருதுக்கான விண்ணப்ப விவரங்களை https://www.awards.tn.gov.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 10-ம் தேதிவரை பதிவேற்றம் செய்யலாம் என தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை இயக்குநர் டி.ரத்னா அறிவித்துள்ளார்.
إرسال تعليق