மத்திய அரசின், 'கலா உத்சவ்' போட்டிகளை, தமிழக பள்ளிகளில் நடத்த, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மத்திய கலாசாரத் துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும், கலா உத்சவ் என்ற பெயரில், கலை, பண்பாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான போட்டிகளை நடத்தி, மாநில அளவில் தேர்ச்சி பெறுவோரை, ஒடிஷாவில் நடக்கும் தேசிய அளவிலான இறுதி போட்டிக்கு அனுப்பும்படி, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, தமிழக ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு தனித்தனியாக, 10 வகை போட்டிகள் நடத்தப்பட வேண்டும். முதலில் மாவட்ட அளவிலும், பின், மாநில அளவிலும் போட்டிகளை நடத்த வேண்டும்.
வாய்ப்பாட்டு இசை, பாரம்பரிய நாட்டு புற வாய்ப்பாட்டு இசை, தாள வாத்தியம், மெல்லிசை, செவ்வியல் நடனம், பாரம்பரிய நாட்டுப்புற நடனம், காட்சி கலை இரு பரிமாணம் மற்றும் முப்பரிமாணம், உள்ளூர் தொன்மை பொம்மைகள், விளையாட்டுகள் மற்றும் நாடகம் தனி நபர் நடிப்பு போட்டிகள் நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
إرسال تعليق